இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் (கரோனா வைரஸ்) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இன்று ஒரேநாளில் 15 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, இதுவரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 129ஆக உயர்ந்துள்ளது.
இதைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் திரையரங்குகள், வணிக வளாங்கள் மூடப்பட்டு வருகின்றன. மக்கள் கூட்டமான இடங்களுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டடுள்ளது.