கரோனா தீநுண்மி காரணமாக உலகம் முழுவதும் இதுவரை 93 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இப்பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக உலகின் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கரோனா எதிரொலி: இலங்கை - வங்கதேச தொடர் ஒத்திவைப்பு!
கரோனா வைரஸ் (தீநுண்மி) காரணமாக ஜூலை மாதம் நடைபெறவிருந்த இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையிலான தொடர் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.
அதன் ஒருபகுதியாக அடுத்த மாதம் (ஜூலை) நடைபெறவிருந்த இலங்கை - வங்கதேச அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இதனை அதிகாரப்பூர்வமாக ஐசிசி அறிவித்துள்ளது.
மேலும், வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நிஸ்முத்தின் சவுத்ரி கூறுகையில், ”தற்போதைய சூழலில் இலங்கை அணிக்கெதிராக ஒரு முழு கிரிக்கெட் தொடரை நடத்துவது சவாலாக இருக்கும். மேலும் அணியின் வீரர்கள், ஊழியர்கள், பங்குதாரர்கள் ஆகியோரின் பாதுகாப்பு, ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தொடரை ஒத்திவைப்பதாக முடிவுசெய்துள்ளோம்” என்றார்.