பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை முதல் இன்னிங்சில் 195 ரன்களுக்கும், 2வது இன்னிங்சில் 200 ரன்களுக்கும் சுருட்டியதில் இந்திய பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு இன்றியமையாதது.
பந்துவீச்சாளர்கள் ஒருபுறமிருக்க, ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வியைச் சந்தித்திருந்த இந்திய அணியை வழிநடத்தியது மட்டுமில்லாமல், சதமடித்து அணிக்கு வெற்றியையும் ரஹானே தேடித்தந்தது சிறப்புமிக்கது. இதனால் இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் ரஹானே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் ரஹானேவின் கேப்டன்சிக்கு பல தரப்புகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. இதன் ஒருபகுதியாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் வாயிலாக ரஹானேவிற்கு தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார்.