தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இந்திய மகளிர் வீராங்கனைகளுக்கு ஆறுதல் கூறும் விராட் கோலி! - Womens T20 Worldcup

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த இந்திய வீராங்கனைகளுக்கு இந்திய ஆடவர் அணி கேப்டன் கோலி ஆறுதல் கூறியுள்ளார்.

confident-india-girls-will-bounce-back-stronger-kohli
confident-india-girls-will-bounce-back-stronger-kohli

By

Published : Mar 8, 2020, 9:25 PM IST

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடன் 85 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதனால் இந்திய ரசிகர்கள் பலரும் தங்களது சோகத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்திய ஆடவர் அணியின் முன்னாள், இந்நாள் வீரர்கள் மகளிர் அணி வீராங்கனைகளுக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.

இதுகுறித்து கேப்டன் கோலி, ''இந்த டி20 தொடரில் இந்திய மகளிர் அணியின் முயற்சிகள் குறித்து பெருமை கொள்கிறோம். இந்தத் தோல்வியிலிருந்து வேகமாகவும், இதைவிட வலிமையாகவும் எழுச்சி பெறுவார்கள் என்ற நம்பிக்கையுள்ளது'' என்றார்.

இதேபோல் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, ''இந்த உலகக்கோப்பை தொடரில் சிறந்த நிமிடங்களை எங்களுக்கு நீங்கள் வழங்கியுள்ளீர்கள். வெற்றி, தோல்வி இரண்டிலும் உங்களால் பெருமையடைகிறோம்' எனப் பதிவிட்டுள்ளார்.

இதேபோல் முன்னாள் இந்திய ஜாம்பவான் சச்சின், '”இந்திய அணிக்கு இது கடினமான நாள். மிகவும் இளமையான நம் இந்திய அணி வலிமையாக வளர உள்ளது. உங்களின் செயல்கள் பலருக்கும் உத்வேகம் அளித்துள்ளது. எப்போதும் நம்பிக்கையை இழக்கவேண்டாம். கடினமாக உழைத்தால் நாம் நினைத்தது, ஒருநாள் நம் கைகளுக்குக் கிடைக்கும்'' எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:கெத்து காட்டிய ஆஸி., சரணடைந்த இந்தியா... #PhotoStory

ABOUT THE AUTHOR

...view details