கரோனா காரணமாக வீட்டிலேயே முடங்கி இருக்கும் இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள், சக வீரர்களுடன் சமூக வலைதளங்களில் உரையாடி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் ரோகித் சர்மாவுடன் இன்ஸ்டாகிராமில் உரையாடினார்.
யுவராஜ் சிங் மீது காவல் நிலையத்தில் புகார்! - குறிப்பிட்ட சமூகத்தை தரக்குறைவாக பேசிய யுவராஜ் சிங்
குறிப்பிட்ட சமூகத்தை தவறாக பேசியதற்காக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் மீது ஹன்ஸி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் குறித்து பேசும்போது யுவ்ராஜ் சிங், குறிப்பிட்ட சமூகத்தை குறிக்கும் விதமாகப் பேசியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். யுவராஜ் சிங் பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என, ட்விட்டரில் ரசிகர்கள் காட்டமாக ட்வீட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், குறிப்பிட்ட சமூகத்தை தரக்குறைவாக பேசியதற்காக யுவராஜ் சிங் மீது ஹரியானா மாநிலம், ஹன்ஸி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, காவல் கண்காணிப்பாளர் லோக்கேந்திர சிங் தெரிவித்துள்ளார்.