உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு லட்சத்து, ஏழாயிரத்து 103 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவையும் விட்டுவைக்காத இப்பெருந்தொற்றால் 27,892 பேர் பாதிக்கப்பட்டும் 872 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
கரோனா வைரஸால் பல்வேறு விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்தியாவில் டி20 திருவிழாவாக கருதப்படும் ஐபிஎல் டி20 தொடரின் 13ஆவது சீசன் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு விளையாட்டு வீரர்களும் நிதி திரட்டிவருகின்றனர்.
இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிதி திரட்ட பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் கோலி, டி வில்லியர்ஸ் ஆகியோர் முன்வந்துள்ளனர். அதன்படி 2016ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பச்சை நிற ஜெர்சி அணிந்து சதம் அடித்து வான வேடிக்கை நிகழ்த்தினர்.