தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

‘நான் காபியை விரும்புவதில்லை’ - சர்ச்சையை நினைவுகூர்ந்த ஹர்திக் பாண்டியா! - தமிழ் விளையாட்டு செய்திகள்

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, கடந்த ஆண்டு ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியின்போது சர்ச்சையில் சிக்கியதை மறைமுகமாக குறிப்பிட்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Coffee proved too costly for me, I drink green tea: Hardik Pandya
Coffee proved too costly for me, I drink green tea: Hardik Pandya

By

Published : Apr 26, 2020, 3:23 PM IST

இம்மாதம் தொடங்கவிருந்த ஐபிஎல் தொடர், கரோனா அச்சுறுத்தலினால் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் விளையாட்டு வீரர்கள் சமூக வலைதளங்களில் நேரலை நிகழ்ச்சிகளில் தோன்றி தங்களது நேரத்தைச் செலவிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் தினேஷ் கார்திக், ஹர்திக் பாண்டியா இருவரும் இன்ஸ்டாகிராம் நேரலை நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்று, ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தனர்.

இதற்கிடையில் தினேஷ் கார்த்திக், உங்களுக்கு காபி குடிப்பது பிடிக்குமா? என்று கேட்டதற்கு பதிலளித்த ஹர்திக், ‘நான் காபியை விரும்புவது இல்லை. நான் கிரீன் டீ மட்டுமே குடிக்கிறேன். எனது வாழ்வில் ஒருமுறை காபி குடித்தேன், அப்போதே புரிந்துக்கொண்டேன் அது மிகவும் விலை உயர்ந்தது என்று, அதிலிருந்து நான் காபி என்ற பெயரைக் கண்டால் கூட ஒதுங்கியே செல்கிறேன்’ என்று நகைச்சுவையாகத் தெரிவித்தார்.

பொழுது போக்கு நிகழ்ச்சியின் போது பாண்டியா

கடந்த ஆண்டு ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் இருவரும் இணைந்து 'koffee with karan' எனும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, பெண்களைத் தரக்குறைவாக பேசியதாக, இந்திய அணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'உலகக்கோப்பைத் தோல்வி... டி வில்லியர்ஸ், கோலி... ': மனம் திறந்த வார்னர், வில்லியம்சன்!

ABOUT THE AUTHOR

...view details