2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக செயல்பட்டவர், முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரரும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான கேரி கிர்ஸ்டன். இவர் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டின் போது, ஒரு அணியின் வெற்றிக்கான காரணம் அந்த அணியின் பயிற்சியாளர் தான் என்று தெறிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய கிர்ஸ்டன், 'பயிற்சியாளராக செயல்படக் கூடியவர்கள் தங்களுக்கென ஒரு தனிப்பட்ட திறன்களை கையாளத் தெரிந்திருக்க வேண்டும். அதில் குறிப்பாக அணியை வழிநடத்துதல், வீரர்கள் தேர்வு, ஆட்களை சேர்த்துதல், பயிற்சியளித்தல், பயிற்சிக்கான வசதிகளை செய்துகொடுத்தல், ஊடகத்தை சமாளிக்கத் தெரிதல், ஆலோசனை வழங்குதல், அணியின் கருத்துகளை கேட்டறிதல் உள்ளிட்டவைகளை கொண்டிருத்தல் வேண்டும்.
ஏனெனில் ஒரு அணியின் வெற்றியும் தோல்வியும் அந்த அணியின் பயிற்சியாளரையே சேரும். மேலும் ஒவ்வொரு வீரரின் திறமையை அறிந்து அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கி தருவதிலும் பயிற்சியாளரின் பங்கு இன்றியமையாதது. அதே சமயம் புதிய பயிற்சியாளர்களுக்கு அணி வீரர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே அவர்களது முடிவுகள் சுமூகமாக முடியும்.
சில அணி வீரர்கள் குறுகிய காலத்தில் பயிற்சியாளர்களிடம் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டுமென எதிர்பார்கின்றனர். ஆனால் அதற்கு வீரர்களின் ஒத்துழைப்பானது இன்றியமையாதது. மேலும் தற்போதுள்ள சூழலில் கிரிக்கெட்டில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது இன்றியமையாத ஒன்றாக மறியுள்ளது. இதானல் ஒரு அணியின் தரவுகளை நாம் எளிதில் அறியமுடிகிறது, அது நன்மையையும் வழங்கி வருகிறது' என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:மருத்துவமனைக்கு வென்டிலேட்டர்களை வழங்கிய ஜோகோவிச்!