தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

முதல் உலகக்கோப்பை நாயகனுக்கு கிடைத்துள்ள புதிய கௌரவம்! - கிளைவ் லாயிட்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் கிளைவ் லாயிட்டிற்கு இங்கிலாந்தில் வழங்கப்படும் உயரிய விருதான நைட்ஹுட் விருது வழங்கப்படவுள்ளது.

Clive llyod
Clive llyod

By

Published : Dec 28, 2019, 2:41 PM IST

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனான கிளைவ் லாயிட், 1970களில் உலக கிரிக்கெட்டில் மறக்கமுடியாத கேப்டனாக இருந்தார். காரணம் இவர் தலைமையிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் இரண்டு உலகக் கோப்பைகளையும் கைப்பற்றியது. அதோடு மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக கிளைவ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி, தொடர்ச்சியாக 26 போட்டிகளில் வெற்றிபெற்று மற்ற அணிகளை மிரட்டியது.

இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 110 டெஸ்ட் போட்டிகளில் 7,515 ரன்களையும் எடுத்துள்ளார். ஓய்வுக்குப் பின் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிலும் (ஐசிசி) இவர் பொறுப்பு வகித்தார்.

இதனிடையே கிளைவ் லாயிட் கிரிக்கெட்டிற்கு அளித்த பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக அவருக்கு ’நைட்ஹுட்’ விருது வழங்கப்படவுள்ளது. இங்கிலாந்தில் வழங்கப்படும் இந்த விருதை கேரி சாபர்ஸ், எவர்டன் வீக்ஸ், விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகியோருக்கு அடுத்தபடியாக பெறும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமையை கிளைவ் லாயிட் பெற்றுள்ளார்.

நைட்ஹுட் விருது பெறும் கிளைவ் லாயிட்டிற்கு வாழ்த்து தெரிவித்து வெஸ்ட் இண்டீஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

மேலும் இந்த விருது உலகக் கோப்பை வென்ற இங்கிலாந்து அணி வீரர்களுக்கும் அணியின் பயிற்சியாளர் உள்ளிட்டோருக்கும் வழங்கப்படவுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details