கிரிக்கெட் போட்டிகளில் பலமுறை பேட்ஸ்மேன்களை ரன் அவுட் செய்வதற்காக பந்துவீச்சாளர்கள், கால்பந்து வீரராக மாறுவதைப் பார்த்திருப்போம். பிட்ச்சில் நடுவே இருக்கும் பந்தை கீழே குணிந்து எடுக்காமல் பந்துவீச்சாளர்கள் தங்களது கால்பந்து திறனை வெளிப்படுத்தி காலால் பந்தை ஸ்டெம்புக்கு எட்டி உதைத்து பேட்ஸ்மேன்களை அவுட் செய்வார்கள்.
தற்போது அதேபோன்ற செயலை செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளார் கிறிஸ் மோரிஸ். தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இவர், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 தொடரில் சிட்னி தண்டர்ஸ் அணிக்காக விளையாடிவருகிறார்.
நேற்று சிட்னியில் நடைபெற்ற லீக் போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் அணியின் தொடக்க வீரர் டேனியஸ் ஹியூஸை முதல் ஓவரிலேயே கால்பந்து ஸ்டைலில் ரன் அவுட்டாக்கினார். கிரிக்கெட்டில் கால்பந்து விளையாடி ரன் அவுட் செய்த அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
மழை காரணமாக இப்போட்டி 16 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில், முதலில் பேட்டிங் செய்த சிட்னி சிக்ர்ஸ் அணி 76 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, டி/எல் முறைப்படி சிட்னி தண்டர்ஸ் அணிக்கு 75 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 5.3 ஓவர்களில் சிட்னி தண்டர்ஸ் அணி இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்தபோது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், சிட்னி தண்டர்ஸ் டி/எல் முறைப்படி அணி 5.3 ஓவர்களில் சிட்னி சிக்சர்ஸ் அணியை விட நான்கு ரன்கள் அதிகமாக எடுத்திருந்தது. இதனால், சிட்னி தண்டர்ஸ் அணி இப்போட்டியில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:இந்தியாவின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டர் மரணம்