அபுதாபியில் டி10 கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில், நேற்று நடைபெற்ற முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் மரத்தா அரேபியன்ஸ் - கலந்தர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மரத்தா அரேபியன்ஸ் அணி 10 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 119 ரன்களை எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கிறிஸ் லின் 30 பந்துகளில் நான்கு பவுண்டரி, ஆறு சிக்சர் என 67 ரன்களில் ஆட்டமிழந்தார். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் சிங் ஒரு ரன்னிலேயே ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார்.