தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 31, 2020, 12:53 PM IST

Updated : Feb 1, 2020, 4:41 PM IST

ETV Bharat / sports

நேபாளில் களமிறங்கும் 'யுனிவர்சல் பாஸ்'

''யுனிவர்சல் பாஸ்'' என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல், நேபாளில் முதல்முறையாக நடைபெற உள்ள எவரெஸ்ட் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கவுள்ளார்.

chris-gayle-to-feature-in-everest-premier-league
chris-gayle-to-feature-in-everest-premier-league

ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க என எந்த நாட்டில் டி20 பிரீமியர் லீக் தொடர் நடந்தாலும் எதாவது ஒரு அணிக்காக ''யுனிவர்சல் பாஸ்'' என்று ரசிகர்களால் அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் இடம்பெறுவார்.

கிறிஸ் கெய்ல்

தற்போது நேபாளில் எவரெஸ்ட் பிரீமியர் லீக் தொடர் பிப்.29ஆம் தொடங்கவுள்ளது. இதில் நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்ல் போக்காரா ரைனோஸ் அணிக்காக களம் காணவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கிறிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், '' நேபாளில் நடக்கவுள்ள மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான எவரெஸ்ட் பிரீமியர் லீக் தொடரில் நானும் பங்கேற்கவுள்ளேன். போக்காரா ரைனோஸ் அணிக்காக களமிறங்கவுள்ள எனக்கும், எங்கள் அணிக்கும் ரசிகர்கள் ஆதரவளிக்க வேண்டும்'' என உறுதி செய்துள்ளார்.

யுனிவர்சல் பாஸ் கலக்கியுள்ள பிரீமியர் லீக் தொடர்கள்

40 வயதை எட்டியுள்ள கிறிஸ் கெய்ல், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்திருந்தாலும், டி20 லீக் தொடர்களில் தொடர்ந்து பங்கேற்றுவருகிறார்.

இதையும் படிங்க: பிக் பாஷ் எலிமினேட்டர் சுற்று: ஹோபர்ட் ஹெர்கேன்ஸை வெளியேற்றிய சிட்னி தண்டர்ஸ்!

Last Updated : Feb 1, 2020, 4:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details