தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இந்தியாவும் நான்தான்! பாகிஸ்தானும் நான்தான்! - india vs pak

இங்கிலாந்து: இன்று நடைபெறவுள்ள இந்தியா பாகிஸ்தான் போட்டியில் இரு அணிகளுக்கும் தனது ஆதரவை தெரிவிக்கும் வகையில் கிறிஸ் கெயில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர தொடக்க வீரர் கிறிஸ்

By

Published : Jun 16, 2019, 1:56 PM IST

Updated : Jun 16, 2019, 2:23 PM IST

உலகக்கோப்பை போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இன்று மான்செஸ்டரில் நடைபெறவுள்ள 22ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் மோதுகிறன்றன. பல்வேறு நாட்டின் நட்சத்திர வீரர்களும் இப்போட்டியைப் பற்றி தங்கள் கருத்துகளை கூறிவருகின்றனர்.

இந்நிலையில் இப்போட்டியில் இந்தியா பாகிஸ்தான் என இரு அணிகளுக்கும் தன் ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கும் வகையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர தொடக்க வீரர் கிறிஸ் கெயில் இரு நாட்டு கொடிகளின் வண்ணங்களையும் கொண்ட உடையை அணிந்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Last Updated : Jun 16, 2019, 2:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details