பிசிசிஐயின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் இன்று (டிச.24) அகமதாபாத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் போது புதிய தேர்வு குழு நியமித்தல், பிசிசிஐயின் புதிய துணைத்தலைவரை நியமித்தல், ஐபிஎல் தொடரில் புதிதாக இரு அணிகளை இணைப்பது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தின் முடிவில், 2022ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் புதிதாக இரு அணிகளை இணைப்பதற்கு பிசிசிஐ ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதேபோல் பிசிசிஐயின் துணைத்தலைவராக இருந்த மஹிம் வர்மாவுக்கு பதிலாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜீவ் சுக்லா தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற தகவலும் வெளியாகியது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியை தேர்வு செய்யும் மூன்று பேர் அடங்கிய குழுவையும் பிசிசிஐ அறிவித்துள்ளது.