ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ். 59 வயதாகும் இவர், வர்ணனையாளராக பல போட்டிகளில் பங்கேற்றவர். இவர் நேற்று முன் தினம் உயிரிழந்த நிலையில், கிரிக்கெட் உலகமே இரங்கல் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து இந்திய சினிமாவின் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நேற்று உயிரிழந்தார்.
முக்கிய பிரபலங்களின் உயிரிழப்பால் சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், இருவரது மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கிரிக்கெட் வீரர்கள் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கருப்பு ஆர்ம் பேண்ட் அணிந்து விளையாடினர்.