உலகக் கோப்பை தொடரின் 40ஆவது லீக் போட்டி நேற்று இங்கிலாந்தில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா-வங்கதேசம் மோதிய இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. வங்கதேசத்திற்கு 315 ரன்களை இலக்காக வைத்தது இந்திய அணி. அதன்பின் களமிறங்கிய வங்கதேசம், 286 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியுற்றது.
இந்திய அணியை உற்சாகப்படுத்திய 87 வயது மூதாட்டி! - india won
இந்திய-வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியை 87 வயது மூதாட்டி உற்சாகப்படுத்தி, நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
![இந்திய அணியை உற்சாகப்படுத்திய 87 வயது மூதாட்டி!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3729833-thumbnail-3x2-grandam.jpg)
கடும் போட்டிக்கிடையே வென்ற இந்திய அணியை, ரசிகர்கள் அனைவரும் மைதானத்தில் உற்சாகப்படுத்தி வந்தனர். இந்நிலையில் 87 வயது மூதாட்டி சாருலதா படேல் இந்திய அணியை நடனமாடி, கொடி அசைத்து உற்சாகப்படுத்தினார். அவருடைய 87 வயதிலும், சிறு குழந்தை போல் பீப்பி ஊதி உற்சாகப்படுத்தியது அங்கிருந்தவரை வெகுவாக கவர்ந்தது.
இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு மைதானத்தை விட்டு இந்திய வீரர்கள் திரும்புகையில், விராட் கோலி, ரோகித் சர்மா இருவரையும் கட்டியனைத்து முத்தம் கொடுத்துள்ளார். அதனை கண்ட அங்கிருந்த ரசிகர்கள் கோஷங்களை எழுப்பி மூதாட்டி சாருலதாவை உற்சாகப்படுத்தினர்.