இந்தியாவில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் வெற்றிகரமான பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட். இவர் பயிற்சியின் கீழ் விதர்பா அணி, இரண்டு முறை ரஞ்சிக் கோப்பையையும், ஒருமுறை இராணி கோப்பையையும் கைப்பற்றியது. இந்த அணிக்காக மூன்று ஆண்டுகளாக பயிற்சியாளராக செயல்பட்டு வந்த நிலையில், திடீரென பயிற்சியாளர் பதவியிலிருந்து சந்திரகாந்த் விலகியுள்ளார்.
இதுகுறித்து சந்திரகாந்த் பண்டிட் பேசுகையில், '' மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே அணியுடன் பயணிக்க எனக்கு விருப்பமில்லை. அதனால் பதவி விலக முடிவு செய்தேன். இதைப்பற்றி எனது நண்பர் கிரண் மோரேவிடம் கூறினேன். அதனை அவர் மத்தியப் பிரதேச கிரிக்கெட் நிர்வாகத்திடம் கூறினார்.
தொடர்ந்து அவர்கள் மத்தியப் பிரதேச கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயல்பட விருப்பமுள்ளதா என கேட்டனர். அதனை ஏற்றுக்கொண்டதையடுத்து, இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.