கரிபீயன் பிரிமியர் லீக் போட்டிகள் நேற்று முதல் தொடங்கியது. இதன் இரண்டாவது லீக் ஆட்டத்தில் சோயப் மாலிக் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணி டேரன் சமி தலைமையிலான செயின் லூசியா ஸோக்ஸ் அணியை எதிர்கொண்டது.
முதலில் டாஸ் வென்ற லூசியா ஸோக்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து பிராண்டன் கிங், சந்தர்பால் ஹெம்ராஜ் வாரியர்ஸ் ஆகியோர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் கிங் 7 ரன்களிலும், ஹெம்ராஹ் 14 ரன்களுடன் பெவிலியன் திரும்பினர். அதன்பின் லூசியா ஸோக்ஸ் அணியின் ஓபெட் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வாரியர்ஸ் அணி சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில் இருபது ஓவர்கள் முடிவில் வாரியர் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கீமோ பவுல் 38 ரன்கள் எடுத்தார். லூசியா ஸோக்ஸ் அணி சார்பில் ஓபெட் மெக்காய் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.