தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கேப்டன்கள் இனி கூலாக வியூகங்கள் வகுக்கலாம்! - விதியை நீக்கியது ஐசிசி

லண்டன்: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசவில்லை என்றால் அணியின் கேப்டனை இடை நீக்கம் செய்யும் விதியை ஐசிசி நீக்கியது.

கேப்டன்கள்

By

Published : Jul 20, 2019, 10:48 AM IST

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசாமல் அதிக நேரம் எடுத்துக்கொண்டால் கேப்டனுக்கு 20% அபராதமும், வீரர்களுக்கு 10% அபராதமும் விதிக்க வேண்டும் என்ற விதி இருந்தது. மேலும் ஓராண்டில் இரண்டு போட்டிகளில் இந்த நிலை தொடர்ந்தால், அணியின் கேப்டனை ஒரு ஆட்டத்தில் இடைநீக்கம் செய்யும் விதிமுறையும் அமலில் இருந்தது. இதனால் இக்கட்டான சூழ்நிலையில் எதிரணிகளை வீழ்த்துவதற்கு வியூகங்கள் வகுக்க நேரமில்லாமல் வீரர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர்.

இந்நிலையில், நேற்று ஐசிசி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசாத அணியின் கேப்டன்கள் இனி இடை நீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என்று அறிவித்துள்ளது. இந்த முடிவை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். ஒரு ஆட்டத்தில் செய்யும் தவறுக்கு அணியின் அனைத்து வீரர்களுக்கும் பங்கு உண்டு. ஆனால் அணியின் கேப்டனுக்கு மட்டும் தண்டனை கொடுப்பது சரியானது அல்ல. எனவே ஐசிசியின் இந்த முடிவு அணி கேப்டன்களுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கும். ஆகஸ்ட் 1ஆம் தேதி ஆஷஸ் தொடர் மற்றும் உலகக்கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளதால், ஐசிசி யின் இந்த முடிவு அனைத்து தரப்பினர்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details