தமிழ்நாடு

tamil nadu

கேப்டன்சியில் இம்ரான் கான் ஸ்டைலை பின்தொடர்வேன்: பாபர் அஸாம்...!

By

Published : May 19, 2020, 3:45 PM IST

லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் ஸ்டைலை நான் பின்தொடர்வேன் என பாகிஸ்தான் ஒருநாள் அணிகளுக்கான கேப்டன் பாபர் அஸாம் தெரிவித்துள்ளார்.

captaincy-goal-babar-azam-aims-to-be-pakistans-next-imran-khan
captaincy-goal-babar-azam-aims-to-be-pakistans-next-imran-khan

பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு கேப்டனாக பாபர் அஸாம் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களிடையே பாபர் அஸாம் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டனாக வலம்வந்த முன்னாள் கேப்டன் இம்ரான் கான் ஸ்டைலை நான் பின்தொடர்வேன் என பாபர் அஸாம் பேசியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், ''பாகிஸ்தான் தலைமை இயக்குநர் வாசிம் கான் என்னிடம் கேப்டன்ஷிப் பற்றி பேசியபோது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. என் தலையில் என்ன எழுதியிருக்கிறதோ, அது எனக்கு வந்து சேரும்.

இம்ரான் கான்

குறைந்த வயதிலேயே கேப்டன்ஷிப் கொடுக்கப்பட்டுள்ளதை கடினமாக உணரவில்லை. எனக்கான பொறுப்புகள் அதிகரித்துள்ளதாகவே கருதுகிறேன். என்னை நம்பி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேப்டன்சியை கொடுத்துள்ளது. அதனை சிறப்பாக செய்வேன்.

நான் சிறுவயது முதலே அட்டாக்கிங் ஸ்டைலில் ஆடி பழக்கப்பட்டவன். அது தான் எனது ஸ்டைலாக இருக்கும். சரியாக சொல்ல வேண்டுமென்றால் இம்ரான் கானை பின்தொடர விரும்புகிறேன். ஒரு கேப்டனாக எப்போதும் பதற்றமில்லாமல் இருக்க வேண்டும். நம் வீரர்களை வைத்து எதிரணி வீரர்களை வீழ்த்துவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.

கேப்டன்சி பற்றி பாபர் அஸாம் வார்த்தைகள்

களத்தில் எப்போதும் எனது உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருக்க முயற்சிப்பேன். அதற்கு மனஉறுதியை அதிகரிப்பது தான் ஒரே வழி. ஒவ்வொரு வீரருக்கும் தொடர்ந்து ஆதரவளித்தால், அவர்கள் நிச்சயம் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்'' என்றார்.

இதையும் படிங்க:’அவர் ஒரு வேற்று கிரகவாசி' - ரோஹித் சர்மா!

ABOUT THE AUTHOR

...view details