நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி 27 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் டி20 போட்டிகளில் கேப்டனாக விராட் கோலி 1126 ரன்கள் எடுத்துள்ளார்.
முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி 1112 ரன்களுடன் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த கேப்டன்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தார். இந்தப் போட்டியில் 25 ரன்களைக் கடந்தபோது, முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை முறியடித்தார்.
தோனியின் சாதனையை உடைத்த விராட் கோலி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி 62 இன்னிங்ஸ்களில் அடித்த ரன்களை, விராட் கோலி 37 இன்னிங்ஸ்களிலேயே முறியடித்துள்ள சம்பவம் கோலி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தப் பட்டியலில் தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் டூ ப்ளஸிஸ் 1273 ரன்களுடன் முதல் இடத்திலும், நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 1243 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
இதையும் படிங்க: வெறித்தனம் காட்டிய ரோஹித்: சூப்பர் ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி!