அரசுமுறைப் பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அவரது மனைவி மெலானிய ட்ரம்ப் ஆகியோர் இந்தியா வருகைதந்துள்ளனர். நேற்று உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மொடீரா மைதானத்தில் நடைபெற்ற ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற ட்ரம்ப், இந்திய அணியின் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், விராட் கோலியை புகழ்ந்து பேசினார்.
ஆனால் அவர் சச்சினின் பெயரை உச்சரிக்கும்போது ‘சூச்சின் டெண்டுல்கர்’ என உச்சரித்தார். இதனால் கடுப்பான ரசிகர்கள் ட்ரம்பை சமூக வலைதளங்களில் விமர்சித்துவருகின்றனர். அதேபோல் ஐசிசியும் தனது ட்விட்டர் பக்கத்தில் 15 வினாடி காணொலி ஒன்றை வெளியிட்டு அதில் சச்சின் என்பதற்குப் பதிலாக சூச்சின் என மாற்றுவது போன்று சித்திரிக்கப்பட்டு வெளியிட்டது.