பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் அரசு முறை பயணமாக இந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், குஜராத்தின் அகமதாபாத்திலுள்ள மொடீரா கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைக்கவுள்ளார். இந்த மொடீரா மைதனத்திற்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன.
குஜராத்தின் அகமதாபாத்தில் ரூ.800 கோடி மதிப்பில் மொடீரா கிரிக்கெட் மைதானம் விஸ்திரிக்கும் வகையில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு லட்சத்து 10 ஆயிரம் இருக்கைகளைக் கொண்டு தயராகியுள்ள இந்த மைதானம், உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானம் என்ற பெயரை பெற்றுள்ளது.
இதனை, வரும் பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் அரசு முறை பயணமாக இந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திறந்த வைக்கவுள்ளார். பிராமண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த மைதானத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.