இந்த ஆண்டுக்கான மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரை 86 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மைதானத்தில் ரசித்தனர். இந்தியாவிலும் தொலைக்காட்சி டிஆர்பி மகளிர் டி20 உலகக்கோப்பையின்போது விண்ணைத் தொட்டது. இதனால் அப்போதே சில ரசிகர்கள் மகளிருக்கு என ஐபிஎல் தொடர் நடத்த வேண்டும் என வேண்டுகோள்விடுத்தனர்.
தற்போது அதே கருத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார். அதில், "மகளிருக்கான டி20 ஐபிஎல் தொடர் அடுத்தாண்டு தொடங்கப்பட வேண்டும் என எனக்குத் தோன்றுகிறது. ஆடவர் போட்டிகளில் கடைப்பிடிக்கப்படும் விதிகளில் சின்னச்சின்ன மாற்றங்கள் செய்து, மகளிர் ஐபிஎல் தொடரைத் தொடங்க வேண்டும்.
உதாரணத்திற்கு ஆடவர் ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் நான்கு பேரை அனுமதித்த நிலையில், மகளிர் போட்டிகளில் வெளிநாட்டு வீராங்கனைகள் ஆறு பேரை அனுமதிக்க வேண்டும். இந்த வருடத்தில் ஐபிஎல் தொடர் நடந்தால் ப்ளே - ஆஃப் வாரங்களில் மகளிர் டி20 சேலஞ்ச் தொடரில் ஏழு போட்டிகளை நடத்த வேண்டும்.