தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#TNPL: காரக்குடி காளையை புரட்டிய டூட்டி பேட்ரியாட்ஸ்! - winning

திண்டுக்கல்: காரைக்குடி காளை அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டூட்டி பேட்ரியாட்ஸ் அணி பெற்றி பெற்றது.

Call of Duty Patriots

By

Published : Aug 2, 2019, 4:10 AM IST

டிஎன்பிஎல் டி20 தொடரின் 17ஆவது லீக் போட்டியில் காரைக்குடி காளை அணியும் , தூத்துக்குடி டூட்டி பேட்ரியாட்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற டூட்டி பேட்ரியட்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இதனால், களமிறங்கிய டூட்டி பேட்ரியட்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் செற்ப ரன்களில் வெளியேறினாலும், அணியின் கேப்டன் சுப்ரமணிய சிவ அதிரடியாக ஆடி அணியை வீழ்ச்சியிலிருந்து மீள செய்தார்.

பந்தை சிக்ஸருக்கு விளாசிய சுப்ரமணிய சிவா.

அவர் 40 பந்துகளில் 87 ரன்களை குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார். இதன் மூலம் பேட்ரியட்ஸ் அணி நிர்ணயிக்கபட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை எடுத்தது.

அதன்பின் 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இழக்குடன் களமிறங்கிய காரைக்குடி காளை அணி, ஆரம்பம் முதலே எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியில் அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் 57 ரன்கள் வித்தியாசத்தில் காரைக்குடி காளை அணியை வீழ்த்தி டூட்டி பேட்ரியட்ஸ் அணி வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய டூட்டி பேட்ரியட்ஸ் அணியின் கேப்டன் சுப்ரமணிய சிவா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ABOUT THE AUTHOR

...view details