இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்னில் நடைபெறவுள்ளது.
முன்னதாக நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இதனால் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளது.
ஆட்டநாயகனுக்கு கவுரவம்
இந்நிலையில் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருது பெறும் வீரருக்கு ஜானி முல்லாக் பதக்கத்தை வழங்கி கவுரவிக்கவுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூறுகையில், “சர்வதேச சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரெலிய அணியின் கேப்டனாக இருந்த ஜானி முல்லாக்கை நினைவு கூறும் வகையில், பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரருக்கு ஜானி முல்லாக் பதக்கம் வழங்கி கவுரவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.
கேப்டன் ஜானி முல்லாக்
1868ஆம் ஆண்டு உலகச்சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஜானி முல்லாக் செயலாற்றினார். மேலும், அவர் ஆஸ்திரேலிய அணிக்காக1698 ரன்களையும், 235 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதேசமயம் சில நேரங்களில் அணியின் விக்கெட் கீப்பராகவும் பணியாற்றி நான்கு விக்கெட்டுகளையும் வெளியேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கோல்டன் ஃபுட் விருதை வென்றார் ரொனால்டோ!