இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே இத்தொடரின் முதல் போட்டியை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ள நிலையில், இப்போட்டியிலும் வெற்றியை பெற பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
புக்கோவ்ஸ்கி விலகல்
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தின்போது, இந்திய வீரர் கார்த்திக் தியாகி வீசிய பந்தில் ஆஸ்திரேலியாவின் வில் புக்கோவ்ஸ்கி தலையில் காயமடைந்தார். இதையடுத்து அவருக்கு ஒன்பது கட்டங்களாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதையடுத்து தொடரின் முதல் போட்டியிலிருந்து அவர் விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் அவரது நிலை இன்னும் சீரடையாததால், இத்தொடரிலிருந்து முழுவதுமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.