மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர்களான முகேஷ் அம்பானி, நீடா அம்பானி தம்பதியினர் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களுக்காக சிறப்பு தீபாவளி விருந்தை அளித்தனர். இதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, பாண்டியா சகோதரர்கள், யுவராஜ் சிங், மலிங்கா உள்ளிட்ட வீரர்கள் கலந்துகொண்டனர். ஆனால் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா மட்டும் கலந்துகொள்ளவில்லை. இதன் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானபோது, ரசிகர்கள் ஒருவர் பும்ரா எங்கே? ஆர்சிபி அணிக்காக ஆடப்போகிறார் என நினைக்கிறேன் என பதிவிட்டார்.
ஆர்சிபி-க்காக களமிறங்குகிறாரா பும்ரா? மும்பை இந்தியன்ஸ் பதில்! - ஐபிஎல்
மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை அணி வீரர் பும்ரா ஆர்சிபி அணிக்காக களமிறங்கவுள்ளாரா என ட்விட்டரில் ரசிகர் கேட்ட கேள்விக்கு, மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் பதிலளித்துள்ளது.

அதற்கு மும்பை இந்தியன்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில், ரோஹித் ஷர்மாவின் GIF-ஐ 'stay calm' என பதிவிட்டனர்.
மும்பை அணி வீரர் பும்ரா காயம் காரணமாக கலந்துகொள்ளவில்லை என தெரிகிறது. ஏற்கனவே தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக அவர் விலகினார். சில நாட்களுக்கு முன் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறிய நிலையில், பும்ராவுக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை என இந்திய அணியின் பிசியோதரபிஸ்ட் பரத் அருண் கூறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டி20 கிரிக்கெட்டில் இலங்கை வீரரின் மோசமான சாதனை