தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 1, 2019, 5:13 PM IST

ETV Bharat / sports

யார்க்கர் கிங்கின் இரட்டை சாதனை!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர் பும்ரா ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி இரண்டு சாதனைகளை படைத்துள்ளார்.

BUMRAH

தற்போதைய கிரிக்கெட்டின் ’யார்க்கர் கிங்’ என்ற பெயருக்குபொருத்தமானவர்இந்திய பந்துவீச்சாளர் பும்ரா. அவர், தனது வித்தியாமான ஸ்டைலிலும், துல்லியமான யார்க்கர் பந்துகளினாலும் பல எதிரணி வீரர்களை ஒற்றை ஆளாக அவுட் செய்கிறார்.

ஒருநாள், டி20 போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திவந்த பும்ரா, தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது பந்துவீச்சை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளார். ஆன்டிகுவாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்திருந்தார்.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஜமைக்காவின் சபினா பார்க் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும், இவர் இரண்டு சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார். இப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது. இதனை தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் பும்ராவின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து பெவிலியனுக்கு நடையை கட்டினர்.

குறிப்பாக, ஒன்பதாவது ஓவரின் இரண்டாவது பந்தில் டேரன் பிராவோ கேஎல் ராகுலிடம் கேட்ச் தந்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த ஷமராஹ் ப்ரூக்சும் எல்பிடபள்யூ முறையில் அவுட் ஆக, அடுத்து வந்த ரோஸ்டான் சேசும் எல்பிடபள்யூ முறையில் டக் அவுட் ஆக, பும்ரா ஹாட்ரிக் விக்கெட்டை கைப்பற்றினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் பதிவாகும் 44ஆவது ஹாட்ரிக் இதுவாகும்.

இதன்மூலம், சபீனா பார்க் மைதானத்தில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் பும்ரா படைத்துள்ளார். ”ஹாட்ரிக் விக்கெட்டை கைப்பற்றிய இந்த நாள் தனக்கு மறக்க முடியாத நாள்”, என பும்ரா தனது ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

பும்ரா ட்வீட்

ஆம், பும்ரா ட்வீட் செய்ததை போலவே அவருக்கு மட்டுமல்ல இந்திய கிரிக்கெட்டுக்கும் இந்த ஹாட்ரிக் மறக்க முடியாததது தான். ஏனெனில், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டை கைப்பற்றிய மூன்றாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். முன்னதாக, 2001இல் ஹர்பஜன் சிங் கொல்கத்தாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், 2006இல் இர்பான் பதான் கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிராகவும் ஹாட்ரிக் விக்கெட்டை எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details