பொழுதுபோக்கிற்காகவும், வர்த்தக ரீதியாகவும் நடத்தப்படும் ஐபிஎல் தொடர் ரசிகர்களை மகிழ்விப்பதே முக்கிய நோக்கமாக உள்ளது. பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் ஐபிஎல் போட்டி பவுலர்களுக்கு கடுமையான சவால் நிறைந்தது தான். ஆனால், ஐபிஎல்லில் சில பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு மேட்ச் வின்னர்களாக திகழ்கின்றனர்.
ஐக்கிய அமீரகத்தில் நடந்து முடிந்த 14ஆவது ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்களைவிட பவுலர்கள் அதிக சாதனை படைத்துள்ளனர். அதிக டாட் பால்கள் வீசிய முதல் பத்து பவுலர்களில் இந்தியர்கள் நான்கு பேர் இடம்பிடித்துள்ளனர்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியைச் சேர்ந்த முகமது சமி 14 இன்னிங்சில் 140 டாட் பால்களை வீசி 8ஆம் இடத்தில் உள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் 136 டாட் பால்களை வீசி 9ஆவது இடத்தையும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் 122 டாட் பால்களை வீசி 10ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.