தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பிராட்டிற்கு அபராதம்! - தென் ஆப்பிரிக்கா vs இங்கிலாந்து

ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டூ ப்ளஸிஸை ரோக்கி தகாத வார்த்தைகளைப் பேசியதால் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Broad fined, awarded demerit point for profanity
Broad fined, awarded demerit point for profanity

By

Published : Jan 28, 2020, 8:14 PM IST

இங்கிலாந்து - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் சர்ச்சைகள் மிகுந்த தொடராக அமைந்துள்ளது. தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடாவின் வரம்பு மீறிய கொண்டாட்டத்தால் ஒரு போட்டியில் விளையாடத் தடை, இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ரசிகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அபராதம், ஸ்லோ ஓவர் ரேட்டிற்காக தென் ஆப்பிரிக்க அணிக்கு அபராதம் என சர்ச்சைகள் நீண்டன.

தற்போது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டும் அந்த சர்ச்சை வரிசையில் இணைந்துள்ளார். நான்காவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளின்போது தென் ஆப்பிரிக்க கேப்டன் டூ ப்ளஸிஸின் பேட் (pad) மீது சாம் கரண் வீசிய பந்து தாக்கியது.

அப்போது இங்கிலாந்து அணியின் ஸ்டூவர்ட் பிராட் - டூ ப்ளஸிஸ் ஆகியோருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பிராட் தகாத வார்த்தைகளால் பேசியதால், போட்டியின் ஊதியத்திலிருந்து 15% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதனோடு சேர்த்து ஒரு நெகட்டிவ் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற செயல்களில் பிராட் ஏற்கனவே ஈடுபட்டுள்ளதால், இதுவரை 2 நெகட்டிங் புள்ளிகள் பிராட் மீது இருப்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details