தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கோலியிடம் மூன்றும் உள்ளது... அதனால் நிச்சயம் சாதனைப் படைப்பார்: பிரெட் லீ! - விராட் கோலி

மும்பை: இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் படைத்த 100 சதங்கள் சாதனையை, விராட் கோலி நிச்சயம் முறியடிப்பார் என ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரெட் லீ தெரிவித்துள்ளார்.

brett-lee-backs-kohli-to-break-tendulkars-100-tons-record
brett-lee-backs-kohli-to-break-tendulkars-100-tons-record

By

Published : Apr 26, 2020, 12:12 PM IST

கரோனா வைரஸ் காரணமாக விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. இதனால் ரசிகர்களை உயிர்ப்புடன் வைப்பதற்காக விளையாட்டுத் துறை பிரபலங்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் பல்வேறு நேர்காணல்களில் பங்கேற்று வருகின்றனர்.

நேற்று தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பங்கேற்ற ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரெட் லீ, இந்திய வீரர் விராட் கோலியைப் பற்றி புகழ்ந்துள்ளார். அதில், கிரிக்கெட் கடவுள் என ரசிகர்களால் அழைக்கப்படும் சச்சின் சர்வதேச அளவில் 100 சதங்களை விளாசியுள்ளார். அந்த சாதனையை முறியடிக்க வேண்டுமென்றால், ஒருவருக்கு மூன்று விஷயங்கள் இருக்க வேண்டும்.

அவை பேட்டிங் திறன், ஃபிட்னஸ், வெளிநாட்டு போட்டிகளில் ரன்கள் சேர்க்கும் மன உறுதி. இந்த மூன்றையும் சரியாகப் பெற்றிருந்தால் அவரால் நிச்சயம் சர்வதேச அளவில் சச்சினின் 100 சதம் என்ற சாதனையை முறியடிக்க முடியும்.

இந்த மூன்றையும் ஒருங்கே பெற்றவர் விராட் கோலி. அவரின் பேட்டிங் திறன் பற்றியும், ஃபிட்னஸ் பற்றியும் அனைவருக்கும் தெரியும். வெளிநாட்டு போட்டிகளிலும் அவரால் சிறப்பாக ரன்களைக் குவிக்க முடிகிறது.

சரவ்தேச அளவில் விராட் கோலி 70 சதங்களைக் கடந்துவிட்டார். இன்னும் 7 முதல் 8 ஆண்டுகளுக்கு இதே ஃபார்மில் இருந்தால், அவரால் பல உயரங்களைத் தொட முடியும் என்றார்.

இதையும் படிங்க: தலைவன் ஒருவனே: சச்சின்... சச்சின்...
!

ABOUT THE AUTHOR

...view details