நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான பிரெண்டன் மெக்கல்லம், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், கொல்கத்தா, கொச்சி, சென்னை, குஜராத், பெங்களூரு ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். ஐபிஎல் தொடரை போலவே, பிக்பேஷ், கரீபியின் டி20 தொடர்களிலும் விளையாடியுள்ள இவர், அனைத்து விதமான டி20 போட்டிகளில் இருந்தும் சமீபத்தில்தான் ஓய்வு பெற்றார்.
'வந்துட்டேன்னு சொல்லு... திரும்பி வந்துட்டேன்னு சொல்லு' - இது மெக்கல்லம் கம் பேக்! - மெக்கல்லம்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இவர் கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இதை, அந்த அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், ''கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்பது எனக்கு பெருமையாக உள்ளது'' என்றார். இவர் ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளுக்கு விளையாடியிருந்தாலும், இவருக்கும் கொல்கத்தா அணிக்கும் எப்போதும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
ஏனெனில், 2008 ஐபிஎல் தொடரின் அறிமுகப் போட்டியில் இவர், கொல்கத்தா அணிக்காக 158 ரன்களை விளாசி அசத்தினார். 2008 முதல் 2010 வரை கொல்கத்தா அணிக்கு விளையாடிய இவர், மீண்டும் 2012, 2013இல் கொல்கத்தா அணியில் இடம்பிடித்திருந்தார். கொல்கத்தா அணியில் வீரராக அசத்திய இவர், இம்முறை பயிற்சியாளர் என்ற புதிய அவதாரத்தில் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச்செல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.