இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே சிட்னியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது ஹனுமா விஹாரியின் இடத்தில் ரிஷப் பந்த் களமிறங்கி அதிரடி ஆட்டத்தில் எதிரணி பந்துவீச்சாளர்களைத் திணரடித்தார்.
இதில் ரிஷப் பந்த் 97 ரன்களை எடுத்தும் அசத்தினார். இந்நிலையில் சரியான நேரத்தில் ரிஷப் பந்த்தின் வரிசையை மாற்றி ரஹானே தனது கேப்டன்சி திறனை வெளிப்படுத்தியுள்ளார் என அஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசிய பிராட் ஹாடின், “நேற்று (ஜன.11) இந்தியா விளையாடி விதத்தைப் பார்த்தால் முதலிருந்தே ஆட்டத்தை டிராவில் முடிப்பதற்கு விளையாடியிருக்க முடியும். ஆனால் ரிஷப் பந்தின் பேட்டிங் வரிசையை மாற்றி ரஹானே தனது சிறப்பான கேப்டன்ஷியை வெளிப்படுத்தியிருந்தார்.
நீங்கள் ரஹானேவின் கேப்டன்ஷியை உன்னிப்பாகக் கவனித்திருந்தால், அவர் போட்டியில் வெற்றி பெறுவதற்காக ரிஷப் பந்த்தை முன்னதாகவே அனுப்பியது தெரியவரும். ரிஷப் பந்த்தும் தனது வேலையை சிறப்பாகவே செய்திருந்தார்.