தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை புறக்கணியுங்கள்! கம்பீர் கோரிக்கை - புறக்கணியுங்கள்

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியை புறக்கணிக்க வேண்டும் என கவுதம் கம்பீர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கம்பிர்

By

Published : Mar 19, 2019, 10:03 AM IST

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியை புறக்கணிக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் இந்திய ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் கம்பீர் கூறுகையில், பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியை புறக்கணிப்பது கடினமான செயல் என்றும், ஆனால் இங்கிலாந்து அணி 2003ஆம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியை அரசியல் அழுத்தம் காரணமாக புறக்கணித்திருக்கிறது என்றார். பாகிஸ்தான் போட்டியை புறக்கணித்து அடுத்த சுற்றுக்கு போகும் தகுதியை இந்தியா இழந்தாலும் இந்திய ரசிகர்களும், ஊடகமும் அதனை ஆதரிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

ஜிம்பாப்வேக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியை புறக்கணித்ததால் இங்கிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு போகும் தகுதியை 2003ஆம் இழந்தது கவனிக்கத்தக்கது.

உலகக்கோப்பை போட்டி மே 30ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் இந்திய அணி பாகிஸ்தானை ஜீன் 16ஆம் தேதி சந்திக்க உள்ளது. புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பை கண்டிக்காததால் பாகிஸ்தானுடனான விளையாட்டுப் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் என பல தரப்பில் கோரிக்கை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details