இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு டெஸ்ட், ஐந்து டி20, மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இத்தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக, குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள மொடீரா கிரிக்கெட் மைதானத்தில் பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்குகிறது.
மேலும், கரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு 50 விழுக்காடு பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்ற அரசின் உத்தரவுப்படி சென்னையில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் மொடீரா டெஸ்ட் போட்டியிலும் 50 விழுக்காடு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என பிசிசிஐ அறிவித்துள்ளது.