வருகிற அக்.23ஆம் தேதி பிசிசிஐ அலுவலர்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் கலந்துகொள்வதற்கும், வாக்களிப்பதற்கும் ஐந்து மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு கிரிக்கெட் நிர்வாக குழு சார்பாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது என அதனை சீர்திருத்தம் செய்தவதற்காக உச்சநீதிமன்றத்தால் கிரிக்கெட் நிர்வாகக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த கிரிக்கெட் நிர்வாகக் குழு அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டது. இதனை பெரும்பாலான கிரிக்கெட் சங்கங்கள் அமல்படுத்தாமல், உத்தரவினை மீறியும் செயல்பட்டன.
இந்நிலையில் பிசிசிஐ-இன் வாரிய பொதுக்குழு கூட்டத்தோடு இணைந்து அதன் தேர்தலும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக பல்வேறு மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.