நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட் மௌங்கனுய்யில் வியாழனன்று தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வுசெய்து தனது முதல் இன்னிங்ஸில் 353 ரன்களை எடுத்தது.
அதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு வாட்லிங், மிட்சல் சாண்ட்னர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மிரட்டினர். நேற்று நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி சார்பில் பிஜே வாட்லிங் 119 ரன்களுடனும், மிட்சல் சாண்ட்னர் 31 ரன்களுடனும் களத்திலிருந்தனர்.
அதன் பின் இன்று தனது நான்காவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த நியூசிலாந்து அணிக்கு சாண்ட்னர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சர்வதேச டெஸ்டில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். அதனைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சாண்ட்னர் 126 ரன்கள் அடித்திருந்த நிலையில், விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.