நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட் மௌங்கனுய் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்களை எடுத்தது. இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணி, பி.ஜே வாட்லிங்கின் இரட்டை சதம், மிட்சல் சான்ட்னரின் சதத்தால் 615 ரன்களைக் குவித்தது. இந்த ஜோடி ஏழாவது விக்கெட்டுக்கு 261 ரன்களைச் சேர்த்தது.
இப்போட்டியில் பி.ஜே வாட்லிங் இரட்டை சதம் அடித்ததன் மூலம், டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் நியூசிலாந்து விக்கெட் கீப்பர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதுமட்டுமின்றி, டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த பத்தாவது விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த விக்கெட் கீப்பர்கள்:
- இம்தியாஸ் அகமது (பாகிஸ்தான்) 209 ரன்கள் vs நியூசிலாந்து, லாகூர், 1955
- தஸ்லிம் அரிஃப் (பாகிஸ்தான்) 210 ரன்கள் vs ஆஸ்திரேலியா, பைசலாபாத், 1980
- பிரண்டன் கருப்பு (இலங்கை) 201 ரன்கள் vs நியூசிலாந்து, கொழும்பு, 1987
- அன்டி ஃபிளாவர் (ஜிம்பாப்வே) 232 ரன்கள் vs இந்தியா, நாக்பூர், 2000
- ஆடம் கில்கிறிஸ்ட் (ஆஸ்திரேலியா) 204 ரன்கள் vs தென் ஆப்பிரிக்கா, , ஜோகனஸ்பர்க், 2002
- குமார் சங்ககரா (இலங்கை) 230 ரன்கள் vs பாகிஸ்தான், லாகூர், 2002
- தோனி (இந்தியா) 224 ரன்கள் vs ஆஸ்திரேலியா, சென்னை, 2013
- முஷ்பிகூர் ரஹிம் (வங்கதேசம்) 200 ரன்கள் vs இலங்கை, காலே, 2013
- முஷ்பிகூர் ரஹிம் (வங்கதேசம்) 219 ரன்கள் vs ஜிம்பாப்வே, டாக்கா, 2018
- பி.ஜே வாட்லிங் (நியூசிலாந்து) 205 ரன்கள் vs இங்கிலாந்து, , மவுண்ட் மௌங்கனுய் , 2019
இதையும் படிங்க:விக்கெட் கீப்பிங்கின் 'கில்லி'க்கு பிறந்தநாள்!