நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட் மௌங்கனுய்யில் வியாழனன்று தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வுசெய்து தனது முதல் இன்னிங்ஸில் 353 ரன்களை எடுத்தது.
அதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டத்தில் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. பின் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே நியூசிலாந்து அணியின் நிக்கோலஸ் 41 ரன்களில் வெளியேறி அதிச்சியளித்தார்.
அதன் பின் ஜோடி சேர்ந்த காலின் டி கிராண்ட்ஹோம், வாட்லிங் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிறப்பாக விளையடிய வாட்லிங் சர்வதேச டெஸ்ட் போட்டியில் தனது 18ஆவது அரைசத்ததை கடந்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த கிராண்ட்ஹோம் தனது பங்கிற்கு அரைசதம் விளாசி அணியை வலிமைப்படுத்தினார்.
இதன் மூலம் தற்போது வரை நியூசிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 307 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியில் வாட்லிங் 72 ரன்களுடனும். கிராண்ட்ஹோம் 63 ரன்களுடனும் களத்திலுள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் சாம் கர்ரன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க: ஈடன் கார்டனில் எனக்கு பிடித்தமான பல நினைவுகள் உள்ளன - ஹர்பஜன் சிங்