தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'ரசிகர்கள் தான் மைதானங்களின் மிகப்பெரும் பங்குதாரர்கள்' - லக்ஷ்மன், ஜாஃபர் புகழாரம்! - இந்தியா இங்கிலாந்து

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதையடுத்து இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் விவிஎஸ் லக்ஷ்மன், வாசிம் ஜாஃபர் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.

Biggest stakeholders: Laxman, Jaffer welcome return of fans in 2nd Test
Biggest stakeholders: Laxman, Jaffer welcome return of fans in 2nd Test

By

Published : Feb 13, 2021, 11:46 AM IST

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படு தோல்வியடைந்தது. இந்நிலையில் இரண்டாவது போட்டி இன்று (பிப்.13) முதல் பிப்ரவரி 17ஆம் தேதிவரை நடைபெற உள்ளது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக முதல் டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு 50 விழுக்காடு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் அவருடைய ட்விட்டர் பதிவில், “சென்னையில் நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியில் மைதானத்தில் ரசிகர்களை காண்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது.

ரசிகர்கள் தான் மைதானத்தின் மிகப்பெரும் பங்குதாரர்கள் மற்றும் விளையாட்டின் ஒருங்கிணைந்த பகுதியானவர்கள். அதனால் இன்றைய போட்டியில் அவர்கள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்த உதவுவார்கள் என நம்புகிறேன். டாஸ் வென்று பேட்டிங் செய்துவரும் இந்திய அணியும் பெரிய இன்னிங்ஸை விளையாடுவார்கள் என நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் வெளியிட்டுள்ள பதிவில், “சேப்பாக்கில் ரசிகர்களை மீண்டும் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி. ரசிகர்கள் எங்கள் விளையாட்டின் இதய துடிப்பு. ரசிகர்களின் ஆதரவு இல்லை என்றால் இன்று இந்திய அணி கிரிக்கெட்டில் தனது சாம்ராஜ்யத்தை நிலைநாட்டிருக்க முடியாது” என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஐஎஸ்எல்: டிராவில் முடிந்த ஹைதராபாத் - ஈஸ்ட் பெங்கால் ஆட்டம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details