தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சிஎஸ்ஏ ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நட்சத்திர வீரர்! - ஹென்ரிச் கிளாசென்

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தினால் ஆண்டுதோறும் வழங்கப்படும் சிஎஸ்ஏ ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு, அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஹென்ரிச் கிளாசென் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

big-honour-heinrich-klaasen-on-his-1st-nomination-for-csa-awards
big-honour-heinrich-klaasen-on-his-1st-nomination-for-csa-awards

By

Published : Jun 28, 2020, 7:54 PM IST

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம், ஆண்டுதோறும் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு சிஎஸ்ஏ விருதினை வழங்கி கௌரவிக்கிறது. அந்தவகையில் இந்தாண்டுக்கான சிஎஸ்ஏ விருதுகள் அடுத்த வாரம் வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில் இந்தாண்டுக்கான ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதுக்கு அந்த அணியின் நட்சத்திர வீரர்களான டி காக், லுங்கி நிகிடி, ஹென்ரிச் கிளாசென் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பேசிய கிளாசென், 'உண்மையை செல்லப்போனால் இது எனக்கு கிடைத்த ஒரு மிகப்பெரும் மரியாதை. மேலும் சிஎஸ்ஏ விருதுக்கு நான் பரிந்துரைக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்டதனால் மட்டுமே இது இவ்விருத்துக்கு நான் பரிந்துரைக்கப்பட்டுள்ளேன் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.

எனவே அந்த மூன்று ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக இவ்விருத்துக்கு பரிந்துரைக்கப்ப்பட்டது ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் அங்கு முழு தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் தோழர்களும் இருக்கிறார்கள். எனக்கு முன்னால் இவ்விருத்துக்கு அவர்கள் பரிந்துரைக்கப்படுவதற்கு தகுதியானவர்கள் என நினைக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details