பிக் பாஷ் டி20 தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் அடிலெயிட் ஸ்ட்ரைக்கர்ஸ் - சிட்னி தண்டர்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சிட்னி தண்டர்ஸ் அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக காலெம் ஃபெர்குசன் 73 ரன்கள் அடித்தார். அடிலெயிட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தரப்பில் பீட்டர் சிடில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து, 169 ரன்கள் இலக்குடன் விளையாடிய அடிலெயிட் அணி 15.5 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 118 ரன்களை மட்டுமே எடுத்திருந்தன. இதனால் அடிலெயிட் ஸ்ட்ரைக்கல்ஸ் அணியின் வெற்றிக்கு 25 பந்துகளில் 50 ரன்கள் தேவைப்பட்டன. அதிரடி ஆட்டக்காரர்கள் அனைவரும் ஆட்டமிழக்க, களத்தில் ரஷித் கான், பீட்டர் சிடில் இருவரும் இருந்ததால், சிட்னி தண்டர்ஸ் அணி லாவகமாக வெற்றிபெறும் என ரசிகர்கள் நினைத்தனர்.
ஆனால், களத்திலிருந்த ரஷித் கான் தனது கேமல் பேட்டால் 360 டிகிரி கோணத்திலும் பவுண்ரிகளும், சிக்சர்களுமாக விளாசி ஸ்கோரை உயர்த்தினார். இதையடுத்து, அடிலெயிட் அணி இரண்டு ஓவர்களில் 31 ரன்கள் எடுத்தாக வேண்டிய நிலையில், டேனியல் சாம்ஸ் வீசிய 19ஆவது ஓவரில் ரஷித் கான் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் என 17 ரன்களை சேர்த்தார்.