இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப் போல, ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 தொடர் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது. அந்தவகையில், 2019-20ஆம் ஆண்டுக்கான பிக் பாஷ் தொடரின் ஒன்பதாவது சீசன் இன்று பிரிஸ்பேனில் தொடங்கியது.தொடரின் முதல் போட்டியில் கிறிஸ் லின் தலமையிலான பிரிஸ்பேன் ஹீட் அணி, ஃபெர்குசன் தலைமையிலான சிட்னி தண்டர்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சிட்னி தண்டர்ஸ் அணி ஃபெர்குசனின் பொறுப்பான ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்களை குவித்தது.
ஃபெர்குசன் 44 பந்துகளில் ஆறு பவுண்டரிகள், மூன்று சிக்சர்கள் என 73 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்கமால் களத்திலிருந்தார். அவருக்கு ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து விளையாடி வந்த அலெக்ஸ் ரோஸ் 30 ரன்களிலும், ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய கிறிஸ் க்ரீன் 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பிரிஸ்பேன் ஹீட் அணி தரப்பில் மிட்சல் ஸ்வீப்சன் இரண்டு, பென் கட்டிங் பென் லாஃப்லின், மார்க் ஸ்டீகிட்டி, ஜோஷ் லலோர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.