டி20 போட்டியின் வருகைக்குப் பிறகு இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான முக்கியத்துவம் ரசிகர்கள் மத்தியில் குறைந்துகொண்டே இருக்கிறது. சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ராஞ்சியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியைப் பார்க்க 1,500 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனையாகின. இந்தச் சூழலில், இந்தியா - வங்கதசே அணிகளுக்கு இடையிலான பிங்க் பால் (பகலிரவு டெஸ்ட் ) போட்டி வரும் 22ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது.
இவ்விரு அணிகளும் முதன்முறையாக பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளன. இப்போட்டியின் முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனையாகின. வரலாற்று சிறப்பு மிக்க இப்போட்டியைப் பார்க்க ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இந்தியாவில் முதன்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளதால், இப்போட்டியைக் காண ரசிகர்கள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய தேசிய கிரிக்கெட் அகாடெமியின் தலைவருமான டிராவிட் கூறுகையில்,
"ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க இந்த பிங்க் பால் (பகலிரவு டெஸ்ட்) போட்டி ஒரு புதுமையான முயற்சியாக இருக்கும். அதேசமயம், இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டை மேம்படுத்த இது மட்டுமே ஒரே தீர்வு கிடையாது. அதற்கு முன் நாம் சரி செய்ய வேண்டிய ஏராளமானவிஷயங்கள் உள்ளன.