இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கவுகாத்தி பரஸ்பரா மைதானத்தில் நேற்று நடக்கவிருந்தது. டாஸ் போட்ட பின் பெய்த மழையால் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் ரத்து செய்யப்பட்டது. பிட்ச்சில் ஏற்பட்ட ஈரம், காயாமல் இருந்ததால்தான் ரசிகர்களின் ஏமாற்றத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பிசிசிஐ அலுவலர்கள் பேசுகையில், "ஹேர் ட்ரையரையும் வேக்யூம் கிளீனரையும் பயன்படுத்தி பிட்ச்சை உலர்த்துவதைக் கண்டு யாராக இருந்தாலும் அதிர்ச்சிதான் கொள்வார்கள். இதனால் மைதான ஊழியர்களின் செயல்பாடுகள் பிசிசிஐக்கு அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது. அனைவரும் தலைமை கியூரேட் ஆஷிஷ் போவ்மிக்கின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.
லோதா கமிட்டியின் வரவுக்குப் பிறகு, மாநில கிரிக்கெட் சங்கங்கள் அனைத்துக்கும் தொடர்ச்சியாகத் திட்டமிடுவதற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதேபோல் அலுவலர்களின் வயதும் அனுபவமின்மையும் நேற்று நடந்த சம்பவங்களுக்கு முக்கியக் காரணம்.