குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள கிரிக்கெட் அரங்கம் மறுசீரமைக்கப்பட்டு ’மொடீரா மைதானம்’ என முன்னதாக பெயரிடப்பட்டது. இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வான 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சி கடந்த பிப்ரவரி மாதம் அங்கு நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றனர்.
மறுசீரமைக்கப்பட்ட மொடீரா மைதானத்தின் புகைப்படத்தை வெளியிட்ட ஜெய் ஷா! - பிசிசிஐ செயலாளர்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலர் ஜெய் ஷா தனது ட்விட்டர் பதிவில் புதிய மொடீரா மைதானத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலர் ஜெய் ஷா தனது ட்விட்டர் பதிவில் மொடீரா மைதானத்தின் மறுசீரமைக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு, 'மிக அழகான மொடீரா மைதானம்’ எனக் குறிப்பிட்டு #சர்தார்பட்டேல்மைதானம்' எனும் ஹாஷ் டேக் உடன் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சர்தார் படேல் மைதானம் என்று அழைக்கப்படும் புதிய மொடீரா மைதானத்தின் முதல் தோற்றத்தை ட்விட்டரில் வெளியிட்டது. உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான இது, ஒரே நேரத்தில் 90,000 பேர் அமரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தைவிட (MCG) இது மிகப்பெரிய மைதானமாகும்.