2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து ஐந்து நாள்களாக நடைபெறும் டெஸ்ட் போட்டியை நான்கு நாள்களாக நடத்துவது குறித்து ஐசிசி சமீபத்தில் ஆலோசனை நடத்தியது. இதற்குப் பல்வேறு நாட்டு வீரர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். முக்கியமாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாட்டு வீரர்கள் பெரும் கண்டனத்தைப் பதிவுசெய்தனர்.
ஆனால் பல்வேறு நாட்டு கிரிக்கெட் நிர்வாகங்கள் நான்கு நாள் டெஸ்ட் கிரிக்கெட் குறித்து வாய் திறக்காமல் இருந்தன. தற்போது இது குறித்து பேசிய பிசிசிஐ அலுவலர்கள், "டெஸ்ட் போட்டிகளின் நாள்கள் குறைக்கப்படும் ஆலோசனை குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரின் கருத்துகள் நிச்சயம் ஆலோசிக்கப்படும்.
அவர்களின் கருத்துகளுக்கும் பிசிசிஐ ஆதரவாக இருக்கும். இது குறித்து இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களுடன் ஜனவரி 12ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம்.