கோவிட்-19 பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தியாவில் இம்மாதம் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைத் தொடரும் நடைபெறுமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழத்தொடங்கி விட்டது. மேலும் ஆஸ்திரேலியா செப்டம்பர் 30ஆம் தேதிவரை நாட்டின் எல்லைகளை மூடியுள்ளதால், இத்தொடர் மீதான சந்தேகம் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் செயல் அலுவலர் கெவின் ராபர்ட்ஸ், இந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க வேண்டுமென விருப்பம் தெரிவித்திருந்தார்.
விராட் கோலி - டிம் பெய்ன் இதற்கு பதிலளித்துள்ள பிசிசிஐ, 'இந்தாண்டு இறுதியில் நடக்கும் டெஸ்ட் தொடர் குறித்து இப்போதே சொல்வது மிகவும் கடினமான ஒன்றாகும். மேலும் தற்போது நிலவி வரும் சூழலில் அது பற்றி சிந்திப்பதற்கு எங்களுக்கு நேரமில்லை. முதலில் இப்பெருந்தொற்றிலிருந்து எவ்வாறு வெளிவருவது என்பதை பார்போம், பிறகு மற்றவற்றைப் பற்றி யோசிப்போம். ஏனெனில் இப்பிரச்னையானது அவ்வளவு எளிதில் முடியும் என்று எங்களுக்கு நம்பிக்கையில்லை' என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:தோனிதான் கேப்டன்: கோலி & ஏபிடி!