இது குறித்து ஒரு முன்னணி செய்தி நிறுவனத்திடம் பேசிய துமல், “வீரர்களின் சம்பளத்தை குறைப்பது போன்ற விவாதங்கள் எதுவும் இல்லை. தொற்றுநோயிலிருந்து ஏற்பட்ட பின்னடைவு மிகப்பெரியதாக இருக்கும். இருப்பினும் கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தில் கை வைக்கும் எண்ணம் பிசிசிஐ வாரியத்தின் மனதில் கூட இல்லை” என்று தெளிவுப்படுத்தினார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “வீரர்களின் சம்பளக் குறைப்பு குறித்து நாங்கள் பேசவில்லை. இது ஒரு மிகப்பெரிய பின்னடைவு. நிலைமை மேம்படும் போது இது பற்றி பேசலாம்.
இப்போது எந்த தெளிவும் இல்லை. வருகிற 15ஆம் தேதி வரை எதுவும் தெளிவாக இல்லை. ஆகவே இது பற்றி இப்போது விவாதிக்க மாட்டோம். வெளிநாட்டில் வீரர்கள் விளையாடுவது குறித்து தெளிவான கருத்து கூற முடியாது. ஏனெனில் கோவிட்19 வைரஸ் தாக்குதலுக்கு பின்னால் நிலைமை எவ்வாறு இருக்கும் என்றும் எங்களால் கூற முடியாது.